fbpx

மக்கள் தொகையில் முதலிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் நிலையிலும்… உணவு உற்பத்தியில் மட்டும் இந்தியா தன்னிறைவு பெற்று ஏற்றுமதியும் செய்கிறது எனில் எப்படி சாத்தியமானது??.

என்கிற உலகநாடுகளின் மில்லியன் டாலர் கேள்விகளுக்கும்..விதைத்துவிட்டு மழைக்கு காத்திருக்கும் விவசாயி மனம் எத்தனை தவிப்பாய் இருக்கும் ?? என்கிற ஒற்றை கேள்வியின்  பதிலுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது என்பது, விவசாயி குடும்பத்தினர் மட்டுமே புரிந்து உணர்ந்த நிதர்சனங்கள்.

இந்தியா இன்னும் ஒரு சில வருடங்களிலேயே மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சிவிடும் என்பது சமூக விஞ்ஞானிகளின் கணிப்பாய் இருக்கிறது. இது ஆரோக்கியத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் அறிவின் வெளிப்பாடாக இல்லை என்பது தான் கசப்பான உண்மை. 

சீனர்கள் உணவு முறைகளுக்கான காரணம்

மக்கள்தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனாவில் பல வருடங்களுக்கு முன் பசி பஞ்சம் பட்டினி  என இயற்கை சீற்றம் கொண்ட காலத்தில்தான் பாம்பு தவளை கரப்பான் பூச்சிகளை கூட உணவாக எடுத்துக் கொள்ளலாம் என அரசே அறிவுறுத்தியது. அதன் பிறகுதான் மேற்கண்ட நாம் அறுவறுப்பாய் பார்க்கிற புழு பூச்சிகளை கூட உணவாக உண்ணுகிற பழக்கத்தை சீனர்கள் கொண்டார்கள். 

Chinese changed food during drought

ஆனால்.. மிக குறைந்த பரப்பளவு கொண்டிருந்த போதிலும்… மக்கள் தொகையில் முதலிடத்தை நோக்கி பாய்ந்து முந்திக்கொண்டு இருக்கும் நிலையிலும்… இந்திய மக்கள் தனது  உணவு உற்பத்தியில் தற்போது வரை  தன்னிறைவு பெற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற நிலையிலும் இருக்கிறார்கள். அதனால்தான் உலகநாடுகளின் ஒட்டுமொத்த கவனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது இந்தியா. ‌ 

இந்தியாவின் உணவு உற்பத்தி நிலை 

இந்த தேசத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது எப்படி சாத்தியமானது..?? அதன் ரகசியங்கள் என்ன என்பது போன்ற ஆராய்ச்சி அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த பதிவு.

 சீனா நாட்டிற்குள் வர்த்தகம் செய்யும் நோக்கில் செல்ல எந்த நாட்டிற்கும் அனுமதி இல்லை. சீனாவின் தற்சார்பு கொள்கை அதற்கு இடமளிப்பதில்லை. இந்தியா தான் உலகநாடுகளின் ஒரே பெரிய வர்த்தக மையமாக இருக்கிறது.. உலகநாடுகள் இந்த தேசத்தை வர்த்தக மையமாக தான் பார்க்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட போதிலும்.. மிகக்குறைந்த பரப்பளவு கொண்ட இந்திய தேசம்.. எப்படி தன் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். 

அதற்கு முழுக்க முழுக்க ஒரே ஒரு காரணத்தை வலுவாக சொல்லலாம். அது இந்த தேசத்தின் தட்பவெட்பம்..  அதாவது வருடம் முழுவதும் மழை பெறும் ஈர நிலமும் இருக்கிறது. வருடத்தில் ஒரே ஒரு நாள் கூட மழை பெறாத பாலை நிலமும் இருக்கிறது.

Reason for Mazhai Kanji

மழை…மழைதான் உயிர்நீர்..மழைதான் இந்த பூமிக்கு தாய்ப்பால்… மழை பெறுவதுதான் பாலை நிலத்தையும் சோலைவனமாக மாற்றும் அற்புத சக்தி. ஒவ்வொரு மாதமும் மழை பெறுவது இயற்கையின் செழிப்பு.. ஒவ்வொரு மாதத்திலும் மும்மாரி பெறுவது என்பது இயற்கையின் செல்வசெழிப்பு.

மழை கஞ்சி எப்படி உருவானது?

மழைதான் விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட இந்திய தேசத்தின் பல்வேறு செல்வங்களை… காலங்காலமாக பல்வேறு ஆளுமைகள் படையெடுத்து வந்து கொள்ளையடித்து சென்றதின் அடிப்படை காரணம்.. அந்த பருவ மழை பொய்க்கும் போது தான் வறட்சி, பஞ்சம், பட்டினி என நம் இந்திய தேசமும் இயற்கை சீற்றங்களை எதிர் கொண்டு சந்தித்து தான் இருக்கிறது.   அப்போது கிராம தேவதைகள் செய்கின்ற அற்புதங்கள் தான் மழை கஞ்சி எடுக்கும் நிகழ்வு.

மழை கஞ்சி என்றால் என்ன?

கிராமங்களில் மழைக்காக மக்கள் ஒன்றுகூடி ஒரு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்வார்கள். அதைத்தான் மழை கஞ்சி எடுக்கும்  நிகழ்வு என்கிறார்கள். அது எப்படி செய்கிறார்கள்  என்பதை பற்றி விவரமாக காண்போம். 

ஒருமித்த நேர்மறை எண்ணங்களுக்கு  எதையும் செய்து காட்டும் வல்லமை இருக்கிறது என்பதை இந்த கூட்டு பிரார்த்தனை நிரூபித்து காட்டும்.. ஒருவர் தான் என்னவாக ஆக நினைக்கிறாரோ அதுவாகவே ஆவார். எண்ணம் போல் வாழ்வு என சொல்லப்பட்டது அனைத்தும் அனுபவ கூற்றுகளே ஆகும்.

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழி இருக்கிறது. ஆடியில் விதைத்தால் வரிசையாக மழைக்காலம் தொடங்கி பயிர்களுக்கும் மனிதர்களுக்கும் உயிர்காக்கும் அமோக விளைச்சல் கிடைக்கும். அதனால் ஆடிப்பட்டம் தேடி விதை என்றார்கள். 

ஆனால் ஆடியில் கூட விதைக்க இயலாமல் மழை பொய்க்கும் போது… பயிர்கள் மழையின்றி வாடும்போது… விவசாயி மனசும் வாடிப் போகும். அந்தமாதிரியான நெருக்கடி நேரங்களில்தான் கிராமத்திலுள்ள பெண்கள்  கூடி… தேவதைகள் போல் ஒரு வழிபாடு செய்வார்கள். 

மழை கஞ்சி நிகழ்வு எப்படி நடக்கும்?

இரவில் ஒன்றாக ஒருவர் வீட்டில் எல்லோரும் கூடி… மழை கஞ்சி எடுத்தால் தவிர முளைத்த பயிர்களை காப்பாற்ற முடியாது என்பதை பேசி நாளை கூடுவது என தீர்மானிக்கப்படும். 

மறுநாளில்.. அனைவரும் கூடி ஆளுக்கொரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு… வீடு வீடாக சென்று பழைய சோறு பிச்சையாக பெற்றுக்கொண்டு வருவார்கள். அப்படி வாங்கி வந்த பழைய சோற்றை உப்பு போடாமல்  கலந்து  கரைத்து ஆளுக்கொரு சொம்பில் ஊற்றி தருவார்கள். கடித்துக்கொள்ள சின்ன வெங்காயம் மட்டும் கொடுப்பார்கள்.அதைப்பெற்று சிறியவர் முதல் பெரியவர் வரை  அனைவரும் உப்பில்லாத  நீராகாரம் குடித்துவிட்டு.. ஒப்பாரி ராகத்தில்  ஒரு பாட்டு பாடியபடி சிறிது தூரம் நடந்து எலவு வீட்டில் அழுவது போலவே நிசமான  கண்ணீரோடு அழுவார்கள்.

Mazhai Kanji Process

“மாரியுமில்ல மழையுமில்ல..” என தொடங்கும் அந்த ஒப்பாரிப்பாடல்.. இயற்கையின் பலவீனமான சக்தியை உலுக்கி பலமானதாக மாற்றும்  நோக்கில் ஒன்றாக கூடி பாடி அழுது கூட்டு பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பி வருவதற்குள் மழையில் நனைந்துகொண்டு வந்த காட்சிகளை எல்லாம் பள்ளி நாட்களில் நேரில் கண்டு சாட்சிகளாய் இருந்து பார்த்து உணர்ந்ததை தான் இங்கே  பதிவு செய்திருக்கிறோம். 

“மழை கஞ்சி எடுத்தால் உடனே மழை” – எப்படி சாத்தியம்?

மழை கஞ்சி எடுத்தால் உடனே மழை, இது எப்படி சாத்தியமாகி இருக்கும் என பல நேரங்களில் தீவிரமாய் யோசித்தபோது…அதிலிருக்கிற அறிவியல் சூட்சுமம்  புரிய ஆரம்பித்தது. 

அது என்னவெனில்…. ஆற்றல் அழிவின்மை விதிப்படி…  ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலாக மாறும்..என்ற விதியின்படி மழை வரவேண்டும் என அனைவரும் நினைத்து பிரார்த்திக்கிறார்கள். அங்கே ஒருமித்த எண்ண ஆற்றல்..மிதந்து சென்று மேகங்களூடே  இருக்கும் எதிர்மறை அல்லது நேர்மறை ஆற்றலுடன் எண்ண ஆற்றல் இணைந்து நீர் ஆற்றலாக மாறி பொழிகிறது என்கிற அறிவியல்  மாற்றங்களை யூகித்து உணர்ந்தோம்.

 இப்படியாக ஒருமித்த உணர்வுடன் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து  மழை பெற்றேனும் விவசாயம் செய்து உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றிருக்கிறது என்பதை பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்கிறோம்.. 

இந்த தேசம் பெற்ற  இந்த மழைக்கஞ்சி வழிபாடு என்கிற வரம்தான்.. எதிர்கால உலகத்திற்கேகூட உணவளிக்கும் என்ற வலுவான நம்பிக்கையோடும் பெருமையோடும் வாழ்க்கை பயணத்தில் பயணிப்போம். 💐😍🙏

எழுதியவர் – நண்பர் திரு. தங்க மித்ரன்

இதை பற்றிய உங்களது கருத்துக்களை comment ல் தெரிவிக்கவும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களுக்கு இந்த link ல் சென்று பார்க்கவும்!