fbpx

 

நீங்கள் என்னதான் துணிச்சலான ஆள் என்றாலும் “ஆபரேசன் பண்ணாவிட்டால் தாய்சேய் இருவருக்குமே ஆபத்து” என்று கூறினால் போதும்..ஈரக்குலை நடுநடுங்கிப்போகும்.

 

“செத்தாலும் கேள்வி கேட்கமாட்டேன்” என்று கையெழுத்து போடுவதை தவிர வேறுவழியில்லை.

 

பணத்தைக் கொட்டி அழுது தாயையும் குற்றுயிராக்கி… குழந்தையையும் குறை பிறப்பாக்கி… மெல்ல மெல்ல சீரழிவதை தவிர வேறு வழியில்லை.

 

ஆம்.

தாய்க்கு முதலில் முதுகெலும்பு மஜ்ஜையில் இரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் ஒரு மருந்தைச் செலுத்துவார்கள்.

அதற்குப் பிறகு அந்த தாய் ‘குறுக்கு விளங்காதவள்’ ஆகிவிடுவாள்.

 

வாழ்நாள் முழுவதும் அவளால் 10 நிமிடம் தொடர்ச்சியாக நேராக நிற்கவோ நிமிர்ந்து உட்காரவோ முடியாது.

 

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மெய்யான அமுதமான சீம்பால் சிசேரியனில் பிறந்த… அந்த குறை பிறப்புக்கு கொடுத்துவைக்காது.

ஆரம்பத்திலேயே ஆரோக்கியத்தை பலவீனமாக்கி விட்டால் பிறகு காலம் முழுக்க நோயாளியாய் மருத்துவரை தேடி அலைய வேண்டியதுதான்.

 

ஆயுள் முழுக்க ஆரோக்கியம் தரும் தாய்ப்பால் வராமைக்கு அந்த தாயின் உடல் காரணமல்ல.!

 

அறுவை சிகிச்சையின் போது மயக்க ஊசி போட்டு அல்லது மரத்து போக வைத்து… வயிற்றின் பல அடுக்குகளைக் கிழித்து… குழந்தையை வெளியே எடுப்பார்கள். அந்த மயக்க ஊசி தான் ஆரோக்கிய சீர்கேட்டிற்கு முக்கியமான காரணம் என்பதை மருத்துவர்களே மறுக்கமாட்டார்கள்.

 

 அறுந்த உடலின் அடுக்குகள் இயற்கையாக பழையபடி ஒன்று சேராது.

 காலம் முழுவதும் அவள் பெருத்த வயிற்றில் தழும்போடுதான் அலையவேண்டும்.

 

சுகப்பிரசவம் என்றால் மட்டும் சும்மா விடுவார்களா?! அதற்கும் அதே நிலைதான்.

அறுந்து கிடக்கும் உடல் விழிக்கும் போது அதற்கு ஒன்றும் புரியாது.

தான் சீராட்டி வளர்த்த கரு எங்கே போனது…?!

எப்படி இவ்வளவு பெரிய காயம் ஆனது..?!

 

இரத்தம் கொடுத்து தசை கொடுத்து வெப்பம் கொடுத்து உணவு கொடுத்து எலும்பு கண் இதயம் என அத்தனை உடல் உறுப்புகளையும் பொருத்தி ஒரு ஆறறிவு உயிராக உருவாக்கத் தெரிந்த நம் ஆழமான அறிவுள்ள பெண்ணுடலுக்கு…. அதை  சுகப்பிரசவம் ஆக்கும் நுட்பம் மட்டும் தெரியாமல் போய்விடுமா..என்ன ?!? 

 

2,3 நாட்களுக்குப் பிறகுதான் மெல்ல மெல்ல தாய்க்கு பால் ஊறத் தொடங்கும்.

 

‘இப்போதுதான் நிம்மதி’ என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் பால் வற்றத் தொடங்கி விடும்.

 

ஆறு மாதத்திற்கு பிறகு பால் அறவே இருக்காது. அப்போதுகூட குழந்தைகள் நல மருத்துவத்துக்கு சென்று, பால் சுரக்க மருந்து மாத்திரைகள் சாப்பிடச் சொல்வார்கள். அதையும் செய்வோம். 

சுகப்பிரசவமான பெண்களுக்குமே பால் வராதபடியான மாத்திரைகளும் மருந்துகளும் கொடுத்து அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தை கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது நவீன மருத்துவம்.

இனி வரும் காலத்தில் சிசேரியனில்  குழந்தை பெற்றவளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வீரியமான தாய்ப்பால் வந்தால்தான் அதிசயம்!

பிறகென்ன மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு  அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டியது தான். பணம்  பிடுங்கிகளிடம் பணம் பறிகொடுத்து வருவதும்… பறிகொடுத்த பணத்தை எதையாவது செய்து ஈடு செய்ய முனைவதும் காலம் செய்கிற கோலமென நாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

ப்ரெக்னன்ட் ஆனதுல இருந்து தான் சுகர் வந்துருச்சு

 

குழந்தை உண்டாகி வளரும் போது அதற்கான ஆற்றலுக்கான உடலில் சர்க்கரை லெவல் ஏறும்,

குழந்தை உடல் உருவாக தாயின் உடலில் இரத்த அளவு குறையும்.

உடனே சுகர் ஏறிவிட்டது. அனீமியா வந்துவிட்டது என அதற்கும் மருந்து மாத்திரைகள் கொடுத்து இல்லாத நோயை புகுத்துவோரும் இல்லையென மறுக்க முடியுமா..?!?

“ப்ரெக்னன்ட் ஆனதுல இருந்து தான் சுகர் வந்துருச்சு” என்போர் இன்றும் பரவலாக இருக்கிறார்கள் தானே.. ?!?

யாரோ ஹீலர் பாஸ்கராம்.

“உன் குழந்தையை நீயே பெறு” என்றாராம்.

 

“என்ன அநியாயம்!” என்று பிடித்து உள்ளேவைத்து விட்டார்கள்.

 

சிட்டி ரோபோ பழங்கால முறையை பின்பற்றி பிரசவம் பார்த்தால்…

வேக்குவம் கிளினரால் குழந்தையை வெளியே இழுத்தால் கைதட்டுவோம்!

 

அதையே நிஜத்தில் செய்தால் தூக்கி உள்ளே வைப்போமா?!

நான் கேட்கிறேன் உலகில் உள்ள கோடானு கோடி உயிரினங்கள் பிள்ளைபெறுவது மருத்துவமனையில் தானா?

டிஸ்கவரியில் கூட காட்டுகிறார்களே?!

தன்னந்தனியாக தானே குட்டிகளை ஈன்ற பெண்சிறுத்தை உடனே வேட்டைக்குப் போய்விட்டு வருகிறதே?!

8 மாத கர்ப்பத்தோடு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய ஆப்பிரிக்கப் பெண்மணி பற்றி செய்தி வந்ததே!?

தாய்மை என்ன சுமையா?!

சவரக்கத்தி வைத்திருக்கும் நாவிதரின் மனைவிதான் ஊருக்கு மருத்துவச்சி.

அவள் கிழித்து அறுத்துதான் பிரசவம் பார்த்தாளா?!

அவர்கள் காலத்தில் இன்றைக்கு நிகழ்கிற மாதிரி 37% பிரசவ இறப்பு நடந்ததா?!

சமூக அக்கறையோடு கிராமங்கள்தோறும் இலவசமாய் மருத்துவம் பார்த்த மருத்துவச்சிகள் எங்கே?! 

காசு பணம் கௌரவம் இருக்குனு மனிதநேயத்தை நவீனத்தில் போட்டு நசுக்குகிறோம் என்பதை எப்போது உணர்வோம் ?!? 

அறுவை சிகிச்சைக்கு பிறகு சாக்கடையில் போடும் தொப்புள்கொடியை

இன்று பத்திரமாக சேமித்துவைக்கும் மேற்குலகம் “ஸ்டெம் செல்” மருத்துவம் என்ற பெயரில் ஏதோ அவர்கள்தான் முதலில் கண்டறிந்தது போல பீற்றிக் கொள்கிறார்களே?!

குறவர் சமூகம் செய்து தரும் தொப்புள்கொடி தாயத்தின் அருமையை இன்றுவரை நாம் அறிந்துகொண்டோமா?!

முதலில்… கருத்தரிப்பது என்பது என்ன ஒரு நோயா?

நோயில்லை என்றால் மருத்துவமனை ஏன் போகவேண்டும்?!

ஏன் நோயாளியின் மனநிலைக்கு ஆட்படவேண்டும்?!

பிரசவத்தில் அதிக வலியைக் கட்டுப்படுத்தவும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் இயற்கையான வழியைத் தேடிக்கொண்டு

ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரின் அல்லது ஆலோசகரின் கண்காணிப்பில் வீட்டிலேயே சுகப்பிரசவம் நடக்கவேண்டும். 

கல்லூரி பட்டப் படிப்பில் இதற்கான பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.!!!

ஒவ்வொரு பெண்ணும் சுக பிரசவத்திற்கு மனதளவில் தயாராக வேண்டும். பெண்ணைச் சுற்றி இருப்பவர்களும் தயாராக வேண்டும்.

இயற்கையான ஆரோக்கியத்தை அடுத்த தலைமுறைக்கும் சிதைக்காமல் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்கிற சிந்தனையை தவிர்ப்பதையும்… 

பணம் கௌரவம் அறியாமை போன்ற காரணங்களால் அறுவைசிகிச்சையை ஆதரிக்கிறோம் என்பதையும் நாம் நுட்பமாய் உணரவேண்டும்.

நெருக்கடி நேரங்களுக்களில் தீவிர நோய்களுக்கு தான் நவீன மருத்துவம் என்பதை புரிந்து கொள்ளாமல் தும்மல் புரைக்கு கூட நவீன மருத்துவம் என  தொடர்ந்தால்…..

“சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றோர்” என்கிற தலைப்பில் கின்னஸ் சாதனையாளராய் பெயர்கள் இடம்பெறும் நாள்கள்கூட  வெகுதொலைவில் இருக்காதோ என தோன்றுகிறது…. யாரையும் புண்படுத்துகிற நோக்கமில்லை.. பண்படுத்தும் பேராசை கொண்டுதான் இந்த பதிவு. நன்றி 🙏😔

எழுதியவர் – நண்பர் திரு. தங்க மித்ரன்

இதை பற்றிய உங்களது கருத்துக்களை comment ல் தெரிவிக்கவும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களுக்கு இந்த link ல் சென்று பார்க்கவும்!