fbpx

வெற்றியை தருவது வெற்றிலை பாக்கு..

இது சித்தர்கள் அருளிய சத்தியவாக்கு..

இதில் உள்ள பாடலை கேட்டுப்பாருங்கள் எனர்ஜி டிரிங்க் மாதிரி இருக்கிறது.

இன்றைக்கு நம் பெருவாரியான மக்கள் ஆரோக்கியத்தை இழந்து புற்றுநோய் சர்க்கரை நோய்.. மலட்டுத்தன்மை  போன்ற தீவிரமான நோயாளிகளாய் இருப்பதற்கு காரணம் நாம் வெற்றிலை பாக்கு போடுகிற பழக்கத்தை மறந்து போனதினால்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா…?!? ஆனால் அதுதான் உண்மை.

பைப்பரேசி குடும்பத்தை சேர்ந்த வெற்றிலை குளிர்ச்சியான பகுதியில் படர்ந்து வளரும் ஒரு கொடிவகை தாவரம்.

வெற்றிலையை நாம் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தியதோடு இல்லாமல் நம் கலாச்சாரத்தோடும் இணைத்திருக்கிறோம்.

பிறப்பு இறப்பு முதல் கல்யாணம் காதுகுத்து வரை என எல்லா நிகழ்வுகளிலும் முக்கியமாக  பங்கு வகுப்பது வெற்றிலை பாக்கு தான்.

மூலிகை பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா… ?

வெற்றிலையும் சிறிது பாக்கு சுண்ணாம்பும் வாயில் போட்டு மென்று உமிழ் நீரோடு சேர்ந்து  பெறும் சாறுதான் மூலிகை சாறு என்கிறார்கள்.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை  சரிசெய்து உடல் இறுக்கம், குடல் புண்களை ஆற்றுகிறது.

வெட்டுக்காயம்கள் சிராய்ப்புகள் கை கால் வீக்கங்கள் போன்ற சிரமங்கள் இருந்தால்.. வெற்றிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயம் சிராய்ப்பு வீக்கங்களில் தடவினால் குணமாகும். தேள்கடியில் வெற்றிலையுடன் பத்து மிளகு சேர்த்து மென்று சாறு விழுங்கி கடிவாயில் அதை நன்றாக போட்டால் விஷமுறிவு கொடுக்கும்.

வெற்றிலையில் கடுகு எண்ணெய் தடவி இளஞ்சூடாக்கி மார்பில் பற்று போட மார்புச் சளி நீங்கும்..

வெற்றிலையை பாக்கு சுண்ணாம்பு கலந்து மென்று முதல் இரு சாறுகளை துப்பிவிட்டு மூன்றாவது நான்காவது சாறுகளை முழுங்கினால் முழுமையான எளிமையான மருத்துவமாகிறது.

வெற்றிலைசாறு காரமும் இனிப்பும் கலந்த சுவை கொண்டது.

இது வாயில் மெல்லும்போதே  வாயிலுள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து உமிழ்நீரை தூய்மை செய்கிறது. அதோடு வயிற்றில் உள்ள உணவை எளிதாக செரிமானம் செய்து உணவு ஆற்றல் எளிதாக பிரிந்து ரத்தத்தில் கலந்து அந்தந்த உறுப்புகளுக்கு செல்ல உதவுகிறது. அதோடு தவறான உணவு பழக்கத்தினாலோ ரசாயன மாத்திரைகளால் உருவான குடல் புண்களை எளிதாக குணப்படுத்துகிறது.

வயிற்றிலும் குடலிலும் pH லெவலை  கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

மலமிளக்கியாக துணை புரிந்து மலச்சிக்கலை தீர்க்கிறது. அதனால் புற்றுநோய் உருவாகாமல் இருக்க உதவுகிறது இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக செயல்பட்டு நீரிழிவு தொந்தரவுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

வெற்றிலையின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பருக்கள் இல்லாத, மிருதுவான சருமத்தை நமக்கு வழங்க உதவும். இது தோல் ஒவ்வாமை, சொறி, வெயில், தோல் புண், அரிப்பு மற்றும் உடல் துர்நாற்றம் ஆகியவற்றைத் தடுக்கிறது. மஞ்சளுடன் வெற்றிலையை நசுக்கி சாறு கலந்து முகத்தில் மற்றும் ஒவ்வாமை உள்ள இடத்தில் தடவினால் பல்வேறு தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

சிறந்த உணவு உண்டபின் தாம்பூலம் போடுதல் நம் நாட்டில் ஒரு சிறந்த பழக்கமாக இருந்தது.வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு கிராம்பு ஏலக்காய் சாதிக்காய் கலந்து மென்று சாறு விழுங்குவது அவ்வளவு பெரிய சிறப்பு வாய்ந்தது.காலை நேரத்தில் பாக்கு கொஞ்சம் தூக்கலாக கலந்து உண்பது இதய கோளாறுகள் நீக்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்ககிறது. மதிய உணவுக்கு பிறகு சுண்ணாம்பு கொஞ்சம் தூக்கலாக உண்பதினால் கால்சியம் சத்து சேர்ந்து  பல் எலும்புகளுக்கு வலு சேர்த்து ஆரோக்கியமாக வைக்கிறது. 

இன்னும் நிறைய பலன்களை வெற்றிலை தருவதினால் தான் நம் முன்னோர்கள் இதை நம் கலாச்சாரத்தோடு இணைத்து தவறாது பயன்படுத்த கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்

இதன் பயன்பாட்டை தடுக்கிற வகையில்தான் அதை பீடா பான்பீடா என்று தரமில்லாத இனிப்பு மசாலா போதை பொருள்கள் கலந்து பயன்படுத்த பழக்கி நம்மை நோயாளியாக்கிவிட்டார்கள்.

இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாட்டில் ரசாயன சந்தை விரித்தால்தான் பெருவாரியான மக்களை நோயாளியாக்கி அதை தீர்க்கும் மருந்துகளையும் விற்று சம்பாதிக்க முடியும் என அந்நிய சக்திகள் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை தெளிவாக புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு அறிவுறுத்தி விழிப்பாய் இருந்தால்தான் நம் அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியத்தை நாம் அன்பாக பரிசளிக்க முடியும் என நம்புகிறேன். உண்மையை உணர நேர்ந்தவர்கள் இந்த பதிவை பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துங்கள். நன்றி.

எழுதியவர் – நண்பர் திரு. தங்க மித்ரன்

இதை பற்றிய உங்களது கருத்துக்களை comment ல் தெரிவிக்கவும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களுக்கு இந்த link ல் சென்று பார்க்கவும்!